முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்டஅத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே

முத்திக்கு வழி அறியாத மூடரோடு சேர்ந்து முயன்றுகொண்டிருந்த என்னை, பத்தி வழியை அறிவித்து, பழைய வினைகள் சிதறுமாறு, உள்ளத்தின் மலத்தை அறுத்து, சிவமாக்கி ஆட்கொண்டான் என் அப்பன். அவன் எனக்கு அருளியதை வேறு யார் பெறுவார்? அச்சோ, என்ன வியப்பு!

மாணிக்கவாசகர், திருவாசகம் 51, அச்சோப் பதிகம், பாடல் 1
மலைக்குத் திரும்புக